
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்சியில் இஸ்லாம் மதம் ஷரியத் கட்டுப்பாட்டை பொருத்து பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் ஆடவோ, பாடவோ, விழாக்களை கொண்டாடவோ கூடாது. ஆண்கள் தங்களது தாடிகளை சவரம் செய்வதிலிருந்து அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக பெண்களுக்கு ஆடை சுதந்திரம், படிப்பு, சமூக வாழ்க்கையில் ஈடுபடுவது முழுவதுமாக மறுக்கப்பட்டுள்ளது மிகக் கொடுமையானது. தலிபான் ஆட்சி 2021 ல் தொடங்கியதிலிருந்து தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைப்பு, அறநெறி அமைப்பாக மாறி உள்ளது. இந்த அமைப்பின்படியே அனைத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த அமைச்சகம் தற்போது ஒரு கடுமையான விதியை அறிவித்துள்ளது. அதாவது உயிருள்ள எதையும் புகைப்படம் எடுக்கவோ, சமூக வலைதளங்களில் வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான் 17 வது பிரிவு சட்டத்தின்படி, உயிர் கொண்டு அசையும் எதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தண்டனைக்குரிய செயலாகும். இந்த புதிய விதிமுறையை தலிபான் ஆட்சி சமூக ஊடகங்கலிடம் செயல்படுத்த போவதாக கூறியுள்ளது. உயிருள்ள மனிதர்களை காட்டாமல் எப்படி சமூக ஊடகம் செயல்படும்? என்ற கேள்வி ஊடகவியலாளர்கள் இடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பை கடைபிடிக்க பத்திரிகையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த அமைப்பின்படி பெண்கள் தங்கள் முகத்தை காட்டவோ, பொது இடங்களில் பேசுவதோ கூடாது என்ற கடுமையான விதிமுறை முக்கியமானதாகும்.