தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேசன் ஆப் இந்தியா, கேரளா வாள்வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று உள்ளார். இது இவர் வென்ற தேசிய அளவில் 12 வது விருதாகும். இதற்கு துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் 12-ஆவது முறையாக தேசிய அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வாழ்த்துகின்றேன். ஒலிம்பிக் வீராங்கனையான பவானி தேவி, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட போட்டியாளர் என்பது கூடுதல் சிறப்பு. திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும்பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம். அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.