சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அந்த போதை பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்காக 108 காவல்துறையினர் பணியில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போதை பொருள்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழல் காரணமாக, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு காவல்துறையினரின் அறிக்கை திருப்தியாக இல்லை என்றும் நீதிபதிகள் கூறினார். தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினர் நியமிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.