செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நாங்க எந்த பதவியில் இருந்தாலும் சரி,  எந்தெந்த பாதுகாப்பு, படை , பூனை படை, எலி படை இதெல்லாம் இருக்காது… எளிமையாக இருப்பாங்க… வேணும்ன்னா…  ஒரு கான்ஸ்டபிள் வாங்க,  கூட வச்சுக்கோங்க…  பாதுகாப்புக்கு அவ்வளவுதான்… ஒரே ஒரு  வண்டி போதும்… அமைச்சராகும் பட்சத்தில் தனியா போகும் ஒரு வண்டி வேணும்ன்னா  வரலாம்….   அதனால் ஆளுநர் சொன்னது ஒரு தனிப்பட்ட கருத்து.

ஆளுநர்  இருக்க வேண்டிய இடம் 450 ஏக்கர் பூமி…  6000  மான்கள்… ஜாலியா வாழ்ந்துட்டு இருக்காரு மனுஷன்…. நான் 1998லயே போராடினேன்…..  போராட்டமும் என் வாழ்க்கையில் பின்னி பிணைந்தது, உங்களுக்கெல்லாம் தெரியும்.  சின்ன பசங்க நீங்க எத்தனை பேர் இருந்திங்களோ தெரியாது…  35 பேர் கைதானோம். ஆளுநர் மாளிகைக்கு முன்னாடி கிரிக்கெட்  ஆடினேன். அப்போ பாத்திமா பேபி இருந்தாங்க…..

திமுக அரசு என்னை இங்கேயே கைது பண்ணிருச்சு…. கிரிக்கெட் ஆட போனோம்…    எதுக்காக அப்படின்னா…..  ஒலிம்பிக்கில் அப்ப தகரம் கூட வாங்கல….  அங்க 100 ஏக்கர்ல ஸ்விம்மிங் கட்டுங்க,  கபடிக்கு கட்டுங்க….  கிரிக்கெட்டுக்கு கட்டுங்க… ஆடிட்டோரியம் கட்டுங்க…. பயிற்சி கொடுங்க என சொன்னோம்.

இப்ப நடிகர் சங்கத்துக்கு நான் சொல்றது கட்டி….  ஒரு ஸ்விம்மிங் கட்டி உலக தரத்திற்கு பசங்களுக்கு பயிற்சி கொடுக்கணும்….  தினமும் ஏழை  நடிகர்கள் 100 பேரு சாப்பிட்டுட்டு போகணும், அந்த மாதிரி கட்டுங்க அப்படின்னு தான் நான் நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை வச்சேன்…. சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவில் அசைக்க முடியாத மாபெரும் தலைவர். அவர் எப்படி செத்தார் என்பதை இன்னும்  சொல்ல மாட்டேங்குறாங்க என பேசினார்.