
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளமாகும். தேசிய அளவில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதல் இடத்திலும், கர்நாடகா, உத்திர பிரதேசம் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.
அதாவது தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவலிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.