
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் திமுக சார்பில் இருக்கக்கூடிய காவல்துறை அல்லது நடுநிலையாக இருக்கக் கூடிய காவல்துறையை கூப்பிட்டு கௌதமி அவர்களின் வழக்கில் நீங்க நடவடிக்கை எடுங்கன்னு சொன்னா பாரதிய ஜனதா கட்சி சொல்றதை கேட்பார்களா ? அல்லது திமுக கட்சி தலைவர் சொல்றதை காவல்துறை உயர் அதிகாரிகளோ கேட்க போறாங்களா ?
அதனால் எனக்கும் இதில் ஆச்சரியம் என்னன்னா… கௌதமி அவர்கள் கொடுத்த புகார் ஆமை வேகத்தில்… நத்தை வேகத்தில் தான் போயிட்டு இருக்கு.. இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்துல அவர் புகார் கொடுக்கப்பட்ட அந்த நம்பர் பாரதி ஜனதா கட்சியினுடைய சில மந்திரிகளோடு புகைப்படம் எடுத்து இருக்காங்க.
அவங்க ஒரு அறக்கட்டளையின் சார்ந்து இருக்கிறார்கள், அப்படிங்கிறது அவங்களோட தனிப்பட்டது. அதில் எப்பொழுதும் கட்சி தலையிடாது. புகார் கொடுக்கப்பட்டு புகாரில் முகாந்திரம் இருக்குன்னா… கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும். இதிலே பாரதிய ஜனதா கட்சிக்கும், அந்த நபருக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பில் இல்ல…
பாரதிய ஜனதா கட்சியில் எதிலும் இல்லை… நான் பேசினதும் கிடையாது… பார்த்ததும் கிடையாது… அதே போல சீனியர் லீடர்ஸ்ஸும்… இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையிலும் சரி… கட்சியாகவும் சரி…. நான் கௌதமி அவர்களுடன் இருக்கிறேன்…. ஏனென்றால் இது அவர்கள் கஷ்டப்பட்டு….. அவர்களுடைய வாழ்நாளில் அவர் சம்பாதித்த பணம். அவர் சம்பாதித்த சொத்து… யார் தவறான முறையில் அதை எடுத்திருந்தாலும் கூட அது தவறுதான் என தெரிவித்தார்.