
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசியலில் இன்னைக்கு வளர்கின்ற சக்தி பாரதிய ஜனதா கட்சி மாத்திரமே . பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல இடங்களில் 2ஆம் இடத்தில பிஜேபி வரும், அப்படி எல்லாம் கூட கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தேர்தல் தான் அதை நிர்ணயிக்கக் கூடிய விஷயம். ஆனால் பிஜேபி மட்டும் தன தமிழக அரசியலில் வளரும் கட்சியாகஇருக்கின்றது . டிஎம்கே கூட இறங்குமுகம் இருக்கு.
DMK ஓட்டு குறைந்து இருக்கிறது என்பது கருத்துக்கணிப்புகளில் தெரிகிறது. பாஜக கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு வீதம் அதிகரிக்கின்றது. அதனால எதிர்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பிஜேபி வளரும். அது திராவிடியன் ஸ்டாக்கின்னுடைய நேர்மையின்மை, ஊழல், உளறல் அதுவும் சேர்த்துக்கணும்... ஏன்னா அவரு சின்னவரா ? உளறல் மகா மன்னன்.
இப்போ பெங்களூர்ல கேஸ் வந்து இருக்குன்னு நினைக்கிறேன். இவுங்க சொல்லுவாங்க… அது ஒரு பாட்டு கூட இருக்கு…. இடி போல பிள்ளை வந்தால், மடி தாங்குமானு…. அந்த மாதிரி ஸ்டாலினுக்கு ஒரு பிள்ளை. அதனால அந்த கட்சி அழிஞ்சு போற நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது, இதுதான் தமிழ்நாட்டின் உடைய அரசியல் நிலைமையாக இருக்கிறது என பேசினார்.