பள்ளி மாணவ- மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் படி உதவித்தொகை தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் 7 மற்றும் 8ஆம் வகுப்பு பாடங்கள் குறித்த கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

இந்தத் தேர்வு குறித்து விவரங்கள் பின்வருமாறு,
1. இந்தத் தேர்விற்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் 12ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
2. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டண தொகை ரூபாய் 50 சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. மேலும் இது குறித்த விவரங்களை அரசு தேர்வு துறை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
4. 2021- 2022 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தகுதி உடையவர்கள்.
5. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி மாதம் 27ஆம் தேதி, கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.