
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் புரட்சியை கிளப்பியது. இந்த நிலையில் அந்த மாநாட்டில் விஜய் வெளியிட்ட கொள்கைகள், கோட்பாடுகள் குறித்த வேலைகளை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி அந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முன்னேற்பாடாக பல பணிகளை செய்து வருகிறார். தற்போது விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் சட்ட ரீதியான வழிகாட்டுதல் வழங்க குழு ஒன்றை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் சட்டரீதியான அறிவுரைகளை வழங்குவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் பேரணியை உருவாக்க இந்தக் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகின்றன.