தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழகம் முழுவதும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரான அஜிதா ஆக்னல் கலந்து கொண்டார். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து தலையில் கிரீடம் சூட்டி ரூபாய் நோட்டு மாலை போட்டு வரவேற்த்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அஜிதா ஆக்னல் கூறியதாவது, இந்த கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு என்ன உரிமையோ, அதையே பெண்களுக்கும் கொடுத்து இருக்கின்றனர். அதனால் தளபதியோட பயணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள், முதியவர், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தளபதியோட நாடாக தமிழ்நாடு அமைய என்னுடைய வாழ்த்துக்களை தளபதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.