தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.

இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. ஆகவே தமிழகத்தில் ஏப்ரல் 11 வரை வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரம் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.