
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தனது பயண விவரத்தை தமிழில் எழுதி டுவிட் செய்துள்ளார் மோடி. அதில், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை, புதிய முனையக் கட்டிடம் திறப்பு, ஸ்ரீராமகிருஷ்ண மட விழா என தான் கலந்துகொள்ள இருக்கும் பயண விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில், @aaichnairport விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்.
— Narendra Modi (@narendramodi) April 8, 2023