
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீரர்களின் கோப்பை அறிமுக போட்டோ சூட் நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் பங்கேற்றார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2024 ஐபிஎல் நாளை (22ஆம் தேதி) முதல் ஆரம்பமாக உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு மோதுகின்றது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை சேப்பாக் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பாக ருதுராஜ் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விடுவிக்கப்பட்டார்.
𝐈𝐭'𝐬 𝐒𝐡𝐨𝐰𝐓𝐢𝐦𝐞!
The #TATAIPL is here and WE are ready to ROCK & ROLL 🎉🥳🥁
Presenting the 9 captains with PBKS being represented by vice-captain Jitesh Sharma. pic.twitter.com/v3fyo95cWI
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
IPL 2024 TEAM'S CAPTAINS PHOTOSHOOT…!!!! 📸 pic.twitter.com/UNSUNs9xFL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 21, 2024