நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்று நடைபெறவுள்ளது. அதேபோன்று கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கருத்தரங்கில் பங்கேற்க தவெக தலைவர் விஜயின் விமானம் மூலம் இன்று கோவை வருகிறார். அதன் பின் மதியம் மூன்று மணி அளவில் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். அதே போன்று நாளையும் மதியம் 3 மணி அளவில் கருத்தரங்கில் பங்கேற்று நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

இதற்கிடையில் இன்று கோவை வரும் விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்குகளில் 16,000 -த்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தவெகவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்தரங்கில் பங்கேற்க தலைவர் விஜய் வருவதால், அங்கு அவரை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு வரவேண்டும் என்றனர்.