
பிரபல யூட்யூபராக இருப்பவர் TTF வாசன். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி உள்ளார். அதற்காக அவருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி அவர் சமீபத்தில் தனது கையில் பாம்பு ஒன்றை வைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த பாம்பை லைசன்ஸ் பெற்று வளர்த்து வருவதாக தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. லைசன்ஸ் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது சட்டப்படி குற்றமாகும் என்று வனத்துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.