
திரும்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதைத் தொடர்ந்து 7 பெண்கள் உட்பட 11 பேர் அந்த பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி ஒரு ஆசிரியை தன் அறைக்கு தனியாக வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதனால் பதறிப்போன அந்த ஆசிரியர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் ஆசிரியரின் உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.