ஆன்லைன் வகுப்புகள் என்பது COVID-19 தொற்றுநோய்களின் போது ஒரு புதிய கற்பித்தல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் வீடியோக்கள், ஆடியோ கிராபிக்ஸ் போன்ற வடிவங்களில் டிஜிட்டல் தளத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பெண் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மாணவன், அந்த பெண் ஆசிரியரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பெண் ஆசிரியர் மெல்லிய குரலில் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அந்த மாணவன் “நான் உங்களை காதலிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறது. இதற்கு நெடிசன் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த ஆசிரியர் எதிர்கொண்ட விதம் சிலரால் பாராட்டப்பட்டாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.