கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை யாரிடமாவது சொன்னால் “சாபம் விட்டு விடுவேன்… என்று சிறுமியிடம் கூறி பயமுறுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவம் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி முகமது நபியை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு கேரளா நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டணையும், 9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் ஏற்கனவே 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக 26 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார் என்றும், அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.