
ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவின் புதிய ஜெர்சியை அணிந்து உற்சாகமாக கர்ஜிக்கும் வீடியோவை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.மேலும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கில், குல்தீப் யாதவ், சிராஜ், ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் வீடியோவில் தோன்றுகின்றனர். இந்திய அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரான அடிடாஸ் இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஜெர்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த ஜெர்ஸி ரசிகர்களை கவர்ந்ததா என்று கேட்டால், ஆம் நிச்சயமாக கவர்ந்தது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த முறை இந்திய அணிக்காக தயாரிக்கப்பட்ட ஜெர்சியில் தோள்களில் 3 வெள்ளைக் கோடுகளுக்குப் பதிலாக மூவர்ணக் கொடியின் மூன்று வண்ணங்கள் உள்ளன. மார்பின் இடது பக்கத்தில் உள்ள பிசிசிஐ லோகோவில் இப்போது 2 நட்சத்திரங்கள் உள்ளன, இது இந்தியாவின் 2 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளைக் குறிக்கிறது. இந்த வீடியோவில் இந்திய பாடகர் ரஃப்தார் பாடிய ‘3 கா ட்ரீம்’ பாடல் அடங்கியுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1983 – the spark. 2011 – the glory.
2023 – the dream.
Impossible nahi yeh sapna, #3kaDream hai apna.@adidas pic.twitter.com/PC5cW7YhyQ— BCCI (@BCCI) September 20, 2023
Team India's new jersey for ICC World Cup 2023!!!!
Dream 11 logo has been removed in New Jersey The tricolor stripes replaced the three white stripes.🇮🇳🏆#CWC2023 #ICCWorldCup2023 #ICCRankings #rohitsharma #TeamIndia #SanjuSamson #WorldCup2023 #ODIWorldCup2023 #CricketTwitter pic.twitter.com/P0HUorlYsI— Crick Express (@crickexpress24) September 20, 2023
India teams jersey for World Cup 🇮🇳❤️#believeinblue pic.twitter.com/JqgAiNLcZ1
— Imran Hossain IH/इमरान हुसैन 🇮🇳 (@ImranHo19188525) September 20, 2023