
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம். பி- யாக தேஜஸ்வி சூர்யா உள்ளார். இவருக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம். ஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் சமஸ்கிருதத்தில் எம். ஏ பட்டமும், பயோ இன்ஜினியரிங் படிப்பில் b.tech பட்டமும் முடித்துள்ளார். இவர் கன்னட மொழியில் வெளியான பொன்னியன் செல்வன் 2ம் பாகத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவஶ்ரீ ஒரு யூடியூப் சேனல் நடத்தில் வருகிறார். இவரது சேனலை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.