
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை பொருத்தவரை பதவி ஒன்று தான் அவர்களுக்கு குறிக்கோள் . யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ? தமிழ்நாட்டு மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன ? இலங்கையில் உள்ள தமிழர்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன ? சிறுபான்மை இன மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன ? என்ற அடிப்படையில் இருக்கின்றார்கள்.
அவர்களுடைய ஆட்சி காலத்தில்… இதே இலங்கையில் ஒன்றை லட்சம் நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் எல்லாம் அழிக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள், தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இப்படி கொடுமைகள் எல்லாம் நடந்தது. அன்றைக்கு ஆட்சியில் திரு கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில்… இவர்களுடைய ஆதரவோடு தான் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
காங்கிரஸ் ஆட்சி நடந்த சூழ்நிலையிலே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதும்… இலங்கையை போரை நிறுத்த சொல்லுங்க என மத்திய அரசை நிர்பந்திக்க சொல்லி இருக்கணும். அன்றைக்கு கூட பதவிக்காக டெல்லியில் முகாமிட்டு…. பதவி வாங்கி கொழுத்தவர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த அன்றைக்கு இருந்த முன்னாள் அமைச்சர்கள். அப்படி பதவிக்காக வேண்டி தானே இருப்பார்களே ஒழிய ஒரு இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என விமர்சனம் செய்தார்.