
செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சின்ன ஸ்டேட்ல, குண்டு சட்டிகுள்ள குதிரை ஓட்டிட்டு நீங்க பேசுவீங்க, அப்ப புதுச்சேரி அவ்வளவு இதா நினைக்கிறாரா அவரு ? அது ஒரு துணை நிலை மாநிலம். அதற்கு ஒரு அமைச்சரவை இருக்குது, முதலமைச்சர் இருக்கிறாரு, அதுக்கு ஒரு திட்டம் இருக்கிறது, பட்ஜெட் இருக்குது.
ஆக நீங்க அதுல இருந்து பேசிட்டு, நாங்க பெரிய மாநிலம் அப்படின்னு ஒன்னு சொன்னாரு, அதுவே நான் கண்டிக்கிறேன். இன்னொன்னு நீங்க வந்து தெலுங்கானாவில் போய் பாருங்கன்னு சொன்னா… தெலுங்கானால என்ன நடக்கணுமோ, அது சரியாதான் நடந்துகிட்டு இருக்கு. இவரை போய் முதல் போய் பார்த்துட்டு வர சொல்லுங்க.
ஆனால், நான் இங்கு என்னோட சொந்த மாநிலத்தில இது மாதிரி இருக்குன்றதுனால… நீங்க உட்கார்ந்து பேசுங்கணு சொல்றதில் என்ன தப்பு இருக்குன்னு நான் கேட்கிறேன்? இதுல வந்து சில பேரு…. ட்விட்ல போடுறாங்க… இது என் குடும்பமா? உட்கார்ந்து பேசுறதுக்குனு…. தமிழ்நாடு குடும்பம் தான சொல்றீங்க…. அப்ப நாம பேசி தான ஆகணும். அதனால இப்படி ஏதோ வழக்குகள், விவாதங்கள், அப்படின்னு டெல்லி வரைக்கும் போறதை விட, நாம ஆளுநரோடு உக்காந்து பேசலாம் என இன்னைக்கும் சொல்றேன் என தெரிவித்தார்.