
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி பருப்பு போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு கைரேகை ஸ்கேன் மூலமாக பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையில் சிலருக்கு கைரேகை பதிவதில் சிக்கல் இருந்ததால் கண் கருவிழி ஸ்கேன் மூலமாக பொருட்கள் வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. அதோடு கண் கருவிழி மற்றும் கைரேகை இரண்டும் பதிவாகாதவர்களுக்கு கையெழுத்து போட்டு பொருட்கள் வாங்கி செல்லும் முறையும் இருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி தற்போது 10,000 பகுதிநேர கடைகளில் கண் கருவிழி ஸ்கேன் மூலமாக பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அதில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 40 மாத திமுக ஆட்சியில் 16 லட்சம் பேருக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.