பிரான்ஸ் நாட்டில் 72 வயதான கிஸ்செல் பெலிகோட்  என்பவர் தன் மீது கணவர் டாமினிக் பெலிகோட் (71) புகார் கொடுத்துள்ளார். அதாவது கிஸ்செல் அறியாதவாறு அவருக்கு மயக்கமருந்து கொடுத்து டாமினிக், வெளியாட்களை அழைத்து வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவங்கள் பல ஆண்டுகளாக அவரது வீட்டில் நடந்து வந்துள்ளன.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறிய நிலையில் கிஸ்செலுக்கு இதை பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அதாவது தன் மனைவிக்கு மயக்கம் மருந்து கொடுத்த பிறகு அவரை வீட்டில் படுக்க வைத்து விட்டு கணவர் வெளியே சென்று விடுவார். பின்னர் வெளியாட்கள் வரைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சென்றுவிடுவார்கள். இதனை அவருடைய கணவர் புகைப்படங்களாக எடுத்து வைத்த நிலையில் சமீபத்தில் இந்த விவரம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் அந்த புகைப்படங்களை கிஸ்செலிடம் காண்பித்துள்ளனர். இதை பார்த்த அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

கிட்டத்தட்ட 51 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் 50 வருட வாழ்க்கை ஒரே நொடியில் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து அவர் மிகவும் மனமடைந்து போய்விட்டார். இந்த கொடூர சம்பவம் கடந்த 2011 முதல் 2020 வரையிலான காலகட்டங்களில் நடந்துள்ளது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில் 7 பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.

கிஸ்செலின் துன்பத்தை வெளிப்படுத்திய பிறகு, பிரான்சில் நூற்றுக்கணக்கானோர் மார்சீல்லே நகரில் இருந்து பாரீஸ் வரை பேரணியாக சென்று அவருக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பினர். இந்த கொடுமைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், மேலும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர். டாமினிக்கின் செயல்கள் 200க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் பதிவாகி உள்ளன. இதனையடுத்து, விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.