தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்படும் பல்வேறு டெண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனம் கொள்வதால் தற்போது பல கோடி ரூபாய் மிச்சமாவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. எந்த ஒரு டெண்டர் ஆக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறாராம். இது குறித்து விசாரிக்கையில் ஒரு முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக கட்சி அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் அரசுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என பாஜக அரசு பல்வேறு விதமான நெருக்கடிகளை கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் அது போன்ற எந்த ஒரு பிரச்சனையும் தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதால் தான் முதல்வர் ஸ்டாலின் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெண்டர் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருப்பதால் அதிகாரிகள் குறைந்த விலைக்கு டெண்டர் விடுவதில் அக்கறை செலுத்துகிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் பணம் மிச்சம் ஆகிறதாம்.