தென்காசி மாவட்டம் கொட்டா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு குருத்திகாவை அவருடைய தந்தையும் சிலரும் சேர்ந்து கடத்திச் சென்றனர். இது குறித்த தகவலின் பெயரில் குருத்திகாவின் தந்தை, தாய் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் குருத்திகாவின் தாய் தர்மிஸ்தா மற்றும் அவருடைய இரண்டாவது கணவர் மைத்திரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது குறித்து 6 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் அவருடைய இரண்டாவது கணவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.