
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அதோடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து “இந்திய பிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு உரிய தண்டனை கொடுப்போம்” என்று கூறியுள்ளார். தற்போது இந்திய நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பின்னர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 5 வது நாளாக நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானின் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.