
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீட்பு பணியில் காவல்துறையினர், SDRF படையினர், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கயிறுகள் மூலம் பள்ளத்தாக்கில் இருந்த மக்களை மீட்க போராடி வருகின்றனர். ஹெல்த்வானிலிருந்து விபத்து நடந்த பள்ளத்தாக்கிற்கு 15 அவசர ஊர்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை பள்ளத்தாக்கில் இருந்து 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிலர் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளதாக மருத்துவமனை செய்திகளை வெளியிட்டுள்ளது.