சீனாவின் ஜெஜியாங் மாகாணம் நிங்போவில் உள்ள சிக்ஸி நகரில் நடந்த ஒரு பயங்கர விபத்தில், 25 வயது டிரைவர் ஒருவர் அதிசயமாக உயிர்தப்பினார். அதாவது செங்லூ உயர்த்தப்பட்ட விரைவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென பாதையை விட்டு விலகிய நிலையில் பல கட்டுமான தடைகளை தாண்டி தரையில் விழுந்தது.

இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயரமான இடத்தில் இருந்து விழுந்தும், அந்த டிரைவர் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் மீட்கப்பட்டார் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தனர். பின்னர் ஹைட்ராலிக் கருவிகளை பயன்படுத்தி, சேதமடைந்த லாரி கேபினில் இருந்து டிரைவரை மீட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரமாக இந்த மீட்பு பணிகள் நடந்தது.

பின்னர் அந்த ஓட்டுனர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.