
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது.
தீயணைப்புத் துறையினர் தீயை அணை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.