தென்கொரிய நாட்டில் தலைநகர் சியோலில் இருந்து தெற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அன்சியாங் நகரில் பாலம் ஒன்று உள்ளது. இந்த விரைவு சாலை மீது கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணியில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென பாலத்தை தாங்கி நின்ற 50 மீட்டர் உயரமுள்ள எஃகு தூண் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.

இந்த விபத்தின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் இறந்துள்ளதாகவும். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். இது குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் 3 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை விரைவாக நடத்த அந்நாட்டின் அதிபர் சோய் சாங் மோக் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.