
ஐரோப்பியாவில் உள்ள ஸ்பெயின் நாட்டில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 60 உயிரிழப்புகள் நிகழ்ந்த பைபோர்ட்டா நகருக்கு ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் ராணி லெட்டிஸியா பார்வையிட சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் மன்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது சகதியை வீசி அடித்துள்ளனர். மேலும் மன்னரை சூழ்ந்து தங்களுக்கு விரைவில் வெள்ளத்தில் இருந்து மீள உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.