
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெற்ற இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 29 ஆம் தேதிவெளியானது .
இந்நிலையில் TET 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. TET 2 தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 28ம் தேதி வெளியானது. சுமார் 4 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.