தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்திற்கு தல அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் பற்றிய ஒரு விஷயம் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் அஜித்துக்கு ஜோதிடத்தில் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறதாம். அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மங்காத்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிகர் அஜித் மங்காத்தா படத்தில் நடிக்கலாமா என்று ஜோதிடம் பார்த்துள்ளார். ஜோதிடத்தில் அந்த படத்தில் நடிக்கலாம் என்று கூறியதால் அவரும் நடித்துள்ளார். ஜோதிடம் சொன்னபடி மங்காத்தா படம் வெற்றி அடைந்ததால் அதிலிருந்து ஜோதிடத்தின் மேல் அஜித்துக்கு அளவு கடந்த நம்பிக்கை வந்து விட்டதாம். மேலும் இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ள நிலையில் வலிமை மற்றும் விவேகம் போன்ற படங்களுக்கும் ஜோதிடம் பார்த்திருக்கலாமே என நடிகர் அஜித்தை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.