
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 67-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்த பட அறிவிப்பு ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வரவுள்ளது என்பது மட்டும் உறுதி. ஆனால் அதற்குள் தளபதி-67 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை விற்கப்பட்டு இருப்பதாக டோலிவுட்டில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பல்வேறு வெற்றிகரமான தெலுங்கு திரைப்படங்களை விநியோகித்துள்ள ஸ்ரீ காயத்ரி தேவி பிலிம்ஸ் எனும் நிறுவனம் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கான விநியோக உரிமையை வாங்கி உள்ளதாம். அதோடு நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் எனவும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..