
தளபதி விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். இவர் கனடாவிலுள்ள ஒரு பல்கலையில் திரைப்படத் துறை குறித்த படிப்பை பயின்று வருகிறார். இதனிடையே ஜேசன் சஞ்சய் நண்பர்களுடன் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் குறும்படம் ஒன்றையும் இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் படிப்பை முடித்தவுடன் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இயக்குனர் சுதா கொங்கரா தற்போது வித்தியாசமான கதையை எழுதி வருகிறார். இப்படம் பிரபல எழுத்தாளர் நரணின் “வேட்டை நாய்கள்” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது.
இந்த நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கதையை விரைவில் சஞ்சய்யிடம் நேரிலோ (அ) போனிலோ சுதா கொங்கரா பேசுவார் எனவும் கூறப்படுகிறது. அதற்கு ஒப்புக்கொண்டால் அவருடன் படம் பண்ண சுதா கொங்கரா முடிவு செய்வார். இப்படத்தில் சஞ்சய் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரது மகனும் தளபதிக்கு போட்டியாக வருவார் என சொலலப்படுகிறது. அதே நேரம் சஞ்சய்க்கு இயக்குநராக ஆசை இருக்கிறது என விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.