
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69′ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறுகின்றனர். இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகின்றார்.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவே ஆகும். இப்படத்தில் ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி போல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.