
இந்தியாவில் 2023-2024 நிதியாட்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருமான வரி செலுத்தியதில் சல்மான் கான், அமிதாபச்சனை விட நடிகர் விஜய் முந்தியுள்ளார். அதாவது நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளார். இதன் மூலம் சினிமா துறையில் அதிக வரி கட்டும் பிரபலமாக அவர் மாறியுள்ளார்.
அதை வேளையில் நடிகர்கள் சல்மான்கான் 71 கோடியும், அமிதாப்பச்சன் 75 கோடியும் வரை செலுத்தியுள்ளனர். நடிகர் விஜய் “தி கோட்” படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வருமான வரி செலுத்தியதில் ஷாருக்கான் முதல் இடத்திலும், நடிகர் விஜய் 2-வது இடத்திலும், சல்மான் கான் 3-ம் இடத்திலும், அமிதாபர்சன் 4-ம் இடத்திலும் உள்ளனர்.