லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா  நேற்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் 1 மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

பொதுவாக நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். ஆனால் லியோ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லாமல் வெற்றி விழா நடைபெறும் நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இந்த வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடுகாத்திருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை 5 கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி பார்க்க வரும் கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சி பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக பாஸ் எடுத்துட்டு வர வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தலானது கொடுக்கப்பட்டு இருந்தது. அதே போல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை, இதோடு நிகழ்ச்சிக்கான பாஸ் என மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு தான் நிகழ்ச்சி நடந்தது.

நடிகர் விஜய் மேடையில் பேசும்போது பல நெகிழ்ச்சியான சம்பவம்  பேசினார். அதில் தொகுப்பாளர்கள் விஜய் இடம் கேள்வி எழுப்பினர்.  2026 சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்வியும் அவரிடம் வைக்கப்பட்டது.  அதற்கு நடிகர் விஜய் ஆரம்பத்தில் கொஞ்சம் மலுப்பலாக இருந்தாலும்,    2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் கப்பு முக்கியம் பிகிலு  என்று ரசிகர்களை பார்த்து தெரிவித்தார்.

நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் குறி வைத்து தான் பேசுகிறார் என்று ரசிகர் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக ஆகி உள்ளது. நடிகர் விஜய் அவர்கள் 2026 தேர்தலில் நேரடியாக சந்திக்க உள்ளார் என்று  இதன் மூலமாக வெளிச்சமாகவே தெரிந்திருக்கிறது நடிகர் விஜய்  அரசியலுக்கு வருகிறாரா?  இல்லையா ? என்பது குறித்தாக தொகுப்பாளர் கேட்ட கேள்வி இருந்தது. அதற்க்கு 2026க்கு கப்பு முக்கியம் பிகில். அதை நீங்கதான் பார்த்துக்கணும் என்று ரசிகர்களை பார்த்து நடிகர் விஜய் சொன்னது மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் நடிகர் விஜய் ஒரே ஒரு உலகநாயகன் தான்… ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்… ஒரே ஒரு தலை தான்… அது மாதிரி ஒரே ஒரு தளபதி தான். நான் சொல்ல விரும்பல.  ஏன்னா தளபதி என்ற பட்டத்தை நீங்க எனக்கு கொடுத்து இருக்கீங்க. தளபதிக்கு மேல மன்னன். மன்னனுக்கு கீழ தான் தளபதி.  ஆனால் மன்னன் யார் என்பது தான் முக்கியம்?  என்னை ஆள்கின்ற மன்னன் நீங்கதான். நீங்க ஆர்டர் போட்டா…  நான் கட்டளையிட்டால் நான் உங்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என தனது அரசியல் ஆசையை  சொல்லி விடைபெற்றார் .