சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலைக்கு வருபவர்கள் மீது சிம்பன்சி குட்டி ஒன்று கற்களை வீசுவதை காண முடிகிறது. எனினும் அதன் தாய்க்கு இந்த செயல் பிடிக்கவில்லை. இதனால் ஒரு பெரிய குச்சியை எடுத்து, குறும்பு செய்யும் குட்டியை அடிப்பது போல அது பாசாங்கு செய்கிறது. மனிதர்கள் மீது கற்கள் வீசுவது தவறு என்பதை அது தன் குட்டிக்கு புரிய வைக்கிறது.