ராஜஸ்தானில் பள்ளி சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது கோழி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் காவல் அதிகாரியிடம் தனது கோழி காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். அதற்கு அந்த அதிகாரி புகார் அளிக்க சொன்ன பிறகு, சிறுவன் எவ்வளவு செலவாகும் என்று கேட்கிறார். அதற்கு அந்த அதிகாரி முற்றிலும் இலவசம் என்று பதிலளிக்கிறார்.

அதோடு தனது கோழி பஞ்சு, வெள்ளை மற்றும் உலகிலேயே சிறந்தது என்று கூறுகிறார். உடனே அதிகாரி கோழியை எடுத்துச் சென்றது யார் என்று தெரியுமா என்ற கேள்வியை கேட்கிறார். அதற்கு சிறுவன் திருடன் முகத்தை பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் கருப்பு ஸ்வெட்ஷர்ட் அணிந்திருந்ததை கவனித்ததாகவும், விரைவாக ஓடிவிட்டதாகவும் கூறினார். அதோடு கடைசியாக தனது கோழிக்கு உணவளிக்கும்போது கொல்லைப்புறத்தில் இருந்ததை கண்டதாகவும், வீட்டிற்குள் நுழைந்த போது அது காணாமல் போய்விட்டதாகவும் கூறினார்.

கோழியை கண்டுபிடிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் அதிகாரி அந்த சிறுவனிடம் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, பக்கத்து வீட்டு மகனுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.