
மாமன்னன் இசைவெளியீட்டில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வடிவேலு, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது. இதை அடுத்து இப்படம் முழுக்க, முழுக்க சமூக நீதிகள் குறித்து விவாதிக்கப்படும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்கவர்க்கம் எப்படி தங்களுக்கான அரசியலில் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மாமன்னன் திரைப்படம் வெளிப்படையாக பேசி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்துள்ள மாமன்னன் கதாபாத்திரம் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராகவும், தற்போது அவிநாசி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் தனபாலின் கதாபாத்திரம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த எம்எல்ஏவாக இருக்கும் வடிவேலுக்கு மாவட்ட செயலாளர் பகத்பாசில் ஜாதி ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை தருகிறார்.
இதில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரம் அதிமுகவின் தனபால் தான் என கூறப்படுகிறது. அப்போது அந்த சமயத்தில் மாவட்ட செயலாக இருந்தது எடப்பாடி பழனிசாமி தான் என இணையவாசி ஒருவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பதிவில் தனபால் தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள், அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
எடப்பாடியை பேட்டி எடுத்து நீங்க இப்படித்தான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா ? என்று கேட்க முன்வரவேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை ரி-ட்விட் செய்த உதயநிதி, அங்கே சிரிப்பது போன்ற ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். தற்போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து ‘நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்.
— Athisha (@athisha) June 30, 2023
— Udhay (@Udhaystalin) June 30, 2023