
சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் இன்று நடைபெற்று வரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வருகை தந்தார். இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து அவர் வந்துள்ளார். அவரை காண ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் ராயப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விஜயுடன் நோன்பு திறக்க 2000-க்கும் அதிகமான இஸ்லாமியர்களும் குவிந்துள்ளனர்.
இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் உள்ள செல்ல பலர் முண்டியடித்ததால் அங்குள்ள கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில் விஜயை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் முண்டியடித்து அரங்கிற்குள் நுழைந்ததால், அழைப்புகள் இருந்தும் இடம் இன்றி வெளியே காத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.