ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீப் போட்டியில் பஞ்சாப் அணியுடன், சிஎஸ்கே போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் களுக்கு 219 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 201 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தது.

 

கடந்த 3 போட்டுகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணிக்கு, இது 4வது தோல்வி ஆகும். இந்நிலையில் தோனி மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, பஞ்சாப் அணி வீரர்களை பதற்றம் அடையச் செய்த 43- வயதுடைய விவசாயி. தனக்கான தோரணையோடு‌ தோனி களத்தில் தொடர்கிறார்!. மரம் நடும் சேவையை மாற்றிக்கொண்டு மஞ்சள் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்! என்று குறிப்பிட்டுள்ளார்.