
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பொக்கோஸ்கி உள்ளூர் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் அடித்து பல ரசிகர்களைப் பெற்றார். 36 உள்நாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 2350 ரன்கள் அடித்துள்ளார். இதில் 7 சதம் அடங்கும். தன்னுடைய திறமை காரணமாக 22 வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களும் அடித்தார்.
இவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து அவரது தலையில் பந்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் பலமுறை அவருக்கு காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விளக்கி உள்ளார். அதன் பின் மீண்டும் களத்தில் இறங்குவார். ஆனால் மீண்டும் அவரது தலையில் காயம் ஏற்பட தொடங்கியது. ஏன் இவருக்கு ஒரே இடத்தில் தொடர்ந்து காயம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதை மறந்து விடுகிறார். இதன் காரணமாக அவரது தலையில் தொடர்ந்து காயம் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறினர். இந்நிலையில் கடைசி ஒருமுறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என்று நினைத்து வந்த போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இப்படி தொடர்ந்து அவரது தலையில் காயம் ஏற்பட்டதால், அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் அவரால் இனி விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய 27 வயதில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.