
- தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரிட்டிஷ் மனிதவளவியலாளர் டாக்டர் பால் வார்னர், எகிப்தின் பிரபலமான கீசா பைரமிட் கட்டிடத்தின் கீழே, இயேசு கிறிஸ்துவின் சடலமும், பைபிளில் குறிப்பிடப்படும் ‘Ark of the Covenant’ எனப்படும் ஒப்பந்த பெட்டியும் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
10 வருட ஆய்வின் பின் அவர், இந்த இரட்டைக் குகை ஒரு பெரிய கற்களால் மூடப்பட்டு பைரமிட் பகுதிக்குள் Southern Passageway-க்கு பின்னால் உள்ளதாக கூறியுள்ளார். 2021-ல் எகிப்து தொல்லியல் கழகத்திற்கு அவர் சமர்ப்பித்த ஆய்வு, “மனிதகுலத்தின் நலனுக்கான விஞ்ஞான புரட்சி” என பாராட்டப்பட்டது.
அந்த இடத்தில் மியான் கதிர்வீச்சு முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த Scan Pyramids Mission திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வார்னர் தெரிவிக்கிறார். இதன் பின்னணியில் பழைய அதிகாரிகளின் எதிர்ப்பு, குறிப்பாக முன்னாள் தொல்லியல் அமைச்சர் சாஹி ஹவாஸ் இருப்பதாகவும் கூறினார்.
எகிப்தின் அதிபரின் அலுவலகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இவரது திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதுடன், இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜூத, கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மத நூல்களில் குறிப்பிடப்படும் “மவுண்ட் சினாய்”, “மவுண்ட் ஒலிவ்ஸ்”, “மவுண்ட் சியோன்” மற்றும் “நூர் மலை” ஆகிய அனைத்தும் ஒரே இடத்தைக் குறிக்கின்றன.
அதுவே கீசா பைரமிட் என வார்னர் வலியுறுத்துகிறார். மெசப்பொத்தாமியக் கல்வெட்டுகளின் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு, அறிவியல் முறைப்படி அவை அனைத்தும் ஒரே இடமாகச் சமன்படுத்தி நிரூபிக்க முயன்றுள்ளார். இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வரும்போது, அது உலக மத வரலாற்றிலும் விஞ்ஞான வரலாற்றிலும் புதிய மையப்புள்ளியாக அமையும் என கூறப்படுகிறது.