
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேம்பாலத்தின் கீழே கிடந்த சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது உயிரிழந்தவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அஞ்சலி என்றும் தெரியவந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அஞ்சலி என்ற பெயரை கொண்ட இந்தப் பெண், ஆணாக மாறி திருநம்பி சஞ்சய் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் அப்பகுதியில் சுற்றி திரிந்த அவர் ஆடைகள் கலந்த நிலையில் சடலமாக மேம்பாலத்திற்கு கீழே கிடந்தார் என்று தெரிய வந்தது. மேலும் இது கொலையா? தற்கொலையா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.