ஜப்பான் மியாசகி விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட்செதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜப்பான் தற்காப்பு படைகள் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 2348 வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இந்த நிலையில் வெடித்து சிதறியது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய குண்டு என்பது தெரியவந்துள்ளது. சுமார் 79 ஆண்டுகளுக்கு பிறகு வெடிகுண்டு வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.