சாலையின் ஓரத்தில் குதிரை ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த சிறுவன் ஒருவன், அதன் அருகில் சென்று, குதிரையை தனது கைகளால் அடித்தார். அப்போது அந்த குதிரை காலை கொண்டு உதைத்தது. இதில் அந்த சிறுவன் சாலையில் விழுந்தார். அதன் பின் மீண்டும் அந்த சிறுவன் குதிரையின் அருகே சென்று தனது கைகளைக் கொண்டு தாக்கினார்.

அதேபோன்று 3-வது முறை தாக்கும் போது குதிரை பலமாக எட்டி உதைத்தது. இதில் அந்தச் சிறுவனின் தலை அருகில் இருந்த பைக்கின் மீது மோதியது. இது தொடர்பான வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இதற்கு நெடிசன் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.