
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் அவரின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் டீ பேக் வீடியோக்கள் வெளியாகி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தி கோட் படத்தில் இடம்பெற்று இருந்த மட்ட பாடலுக்கு நடிகை திரிஷா டான்ஸ் ஆடியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் போது மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருப்பார் திரிஷா.
இந்த புகைப்படத்தை தற்போது இளைஞர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவில் அவர் த்ரிஷாவின் தோளில் கை போடுவது மற்றும் அவரை கட்டிப்பிடித்து லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்று இருக்கிறது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே டீ பேக் வீடியோவால் நடிகைகள் பலர் பாதிக்கப்படும் நிலைகள் தற்போது திரிஷாவை வாலிபர் ஒருவர் இப்படி அவதூறாக வீடியோ வெளியிட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது Trisha க்கு தெரியாம பாத்துக்கோ da பாவம் இப்டி வந்து சந்துல மாட்டிகிட்ட pic.twitter.com/tZpX20DPCU
— நீலன் (@neelan_offl) September 22, 2024